புத்தாண்டு சந்திப்பு - 2011

காவேரி எழுத்தாளர் களஞ்சியத்தின் புத்தாண்டு சந்திப்பு  நேற்று மாலை 6.00 மணிக்கு தமிநாடு மாணவர் இல்லத்தில் நடை பெற்றது. திரு. பன்னீர்செல்வம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவிற்கு திரு. வைரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் களஞ்சியத்தின் முன்னணி ஆர்வலரான திரு. ந.இன்பகரன்  அவர்களின் ‘காவிரிக்கரை கவிஞன்’ எனும் மின்னிதழை திரு. நீலமேகம் அவர்கள் வெளியிட திரு. குணசேகரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

கவிஞர் வேல்விழி அவர்கள் ‘உலகம் – சுயவிமர்சனம்’ எனும் தலைப்பில் வாசித்த கவிதையில்
”தோட்டாக்களுக்கு பேதம் தெரியாது,
விரல்களுக்கும் விலாசம் மறந்து போனது...”

என்ற வரிகள் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
தன்னுடைய தலைமை ஆசிரியரைப்பற்றி கவிஞர் இராமசெயம் கவிதை வாசித்தார்.
“பள்ளிக்கு வராத பிள்ளைகளை
    அழைத்து வந்தாய்
பாடத்திலே தேனைக்கொஞ்சம்
   குழைத்துத் தந்தாய்.”
என்ற வரிகள் அவரது தலைமை ஆசிரியரின் பணபுகளைப் பறைசாற்றியது.

கவிஞர் இரா.சீனிவாசன் அவர்கள் ‘உயரம்’ எனும் தலைப்பில் வாசித்த கவிதை புதுக்கவிதையின் புதிய பரிமாணத்தை உணர்த்தும்படியாக அமைந்தது.  
  
கவிஞர் வேல்விழி, கவிஞர் இராமசெயம், கோ.நீலமேகம், கவிஞர் மா.வைரமணி, கவிஞர் இரா.சீனிவாசன், கவிஞர் லால்.சந்திரன் ஆகியோர் காவேரி எழுத்தாளர் களஞ்சியத்தின் திருச்சிப் பகுதி ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

காவேரி எழுத்தாளர் களஞ்சியத்தின் வளர்ச்சிப்பணிகள் மற்றும் எதிர்கால நிகழ்வுகள் குறித்து திரு.ப.சங்கரன் அவர்கள் விரிவாக உரையாற்றினார்.



காவிரி
அரசியலாகிவிட்டது
விவசாயமாவது எப்போது?

No comments:

Post a Comment